search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய கோப்பை"

    இந்தியா உள்பட 24 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. #AFCAsianCup
    அபுதாபி:

    17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி இன்று முதல் பிப்ரவரி 1-ந் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா, அல் அய்ன் ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, 4 முறை சாம்பியனான ஜப்பான் உள்பட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. கடந்த முறை 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் அணிகளின் எண்ணிக்கை முதல்முறையாக 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, பக்ரைன், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, சிரியா பாலஸ்தீனம், ஜோர்டான், ‘சி’ பிரிவில் தென்கொரியா, சீனா, கிர்கிஸ்தான், பிலிப்பைன்ஸ், ‘டி’ பிரிவில் ஈரான், ஈராக், வியட்நாம், ஏமன், ‘இ’ பிரிவில் சவூதி அரேபியா, கத்தார், லெபனான், வடகொரியா, ‘எப்’ பிரிவில் ஜப்பான், உஸ்பெகிஸ்தான், ஓமன், துர்க்மெனிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3-வது இடம் பெறும் அணிகளில் 4 சிறந்த அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும்.

    அபுதாபியில் இன்று இரவு நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைனை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை நாளை சந்திக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகிறது. இந்தியாவின் ஆட்டம் மற்றும் நாக்-அவுட் சுற்று ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    1956-ம் ஆண்டு முதல் நடந்து வரும் ஆசிய கோப்பை போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்று இருப்பது இது 4-வது முறையாகும். 1964-ம் ஆண்டு போட்டியில் 2-வது இடம் பெற்ற இந்திய அணி அதன் பிறகு குறிப்பிடத்தக்க வகையில் சோபிக்கவில்லை. இந்த ஆசிய கோப்பை போட்டியில் சுனில் சேத்ரி தலைமையில் இந்திய அணி களம் காணுகிறது. சமீப காலங்களில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்த தொடரில் ஜொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AFCAsianCup
    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டத்திற்காக இந்தியா-வங்காளதேச அணிகள் இன்று கோதாவில் இறங்குகின்றன. #AsiaCup2018 #INDvBAN
    துபாய்:

    14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் சூப்பர்-4 சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, பாகிஸ்தான் உள்பட 4 அணிகள் வெளியேற்றப்பட்டன.



    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியாவும், வங்காளதேசமும் துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) மோதுகின்றன.

    இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி இந்தியா தான். ஆனால் பெரிய அணிகளுக்கு எதிராக அமர்க்களப்படுத்திய இந்தியா, குட்டி அணிகளுக்கு எதிராக தகிடுதத்தம் போட்டது. ஹாங்காங்குக்கு எதிரான லீக்கில் பெரும் போராட்டத்திற்கு பிறகே வெற்றி கிடைத்தது. 

    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வியில் இருந்து தப்பித்து சமன் (டை) செய்ததே பெரிய விஷயமாகும். அதே சமயம் பாகிஸ்தானை இரண்டு முறையும், வங்காளதேசத்தை ஒரு முறையும் குறைந்த ரன்களில் சுருட்டி புரட்டியெடுத்தது.

    தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும் (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 269 ரன்), துணை கேப்டன் ஷிகர் தவானும் (2 சதம் உள்பட 327 ரன்) தான் இந்தியாவின் பேட்டிங் தூண்கள் ஆவர். அவர்கள் விளையாடிய 4 ஆட்டங்களிலும் பிரமாதமான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்து வெற்றிக்கு வழிவகுத்தனர். 

    அதே போல் முக்கியமான இந்த ஆட்டத்திலும் அவர்கள் பதற்றமின்றி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் நன்றாக ஆடுகிறார்கள். மிடில் வரிசையில் விக்கெட் கீப்பர் டோனி, கேதர் ஜாதவின் தடுமாற்றம் பலவீனமாக பார்க்கப்படுகிறது. இதே நிலை நீடித்தால் 2-வது பேட்டிங்கில் 240 ரன்களை ‘சேசிங்’ செய்வது கூட கடினமாகி விடும். இவர்கள் பார்முக்கு திரும்பினால் அணி மேலும் வலுவடையும்.

    வேகம் குறைந்த இங்குள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜாவின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும். வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, புவனேஷ்வர்குமாரும் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

    மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணியில் காயம் காரணமாக தமிம் இக்பால், ஷகிப் அல்-ஹசன் ஆகிய முன்னணி வீரர்கள் விலகி விட்டனர். முஷ்பிகுர் ரஹிம் (ஒரு சதம் உள்பட 297 ரன்), முகமத் மிதுன், மக்முதுல்லா ஆகியோரைத் தான் அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது. இவர்கள் நிலைத்து நின்று ஆடினால், நிச்சயம் இது பரபரப்பான போட்டியாக அமையும்.

    சர்வதேச கிரிக்கெட்டில் வங்காளதேச அணி இதுவரை 8 ‘நாக்-அவுட்’ சுற்றில் விளையாடி இருக்கிறது. அவை அனைத்திலும் தோல்வியே மிஞ்சியது. இதில் இந்தியாவுக்கு எதிராக 4 ஆட்டங்களும் அடங்கும். எனவே இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அது வங்காளதேசத்துக்கு வரலாற்று சாதனையாக பதிவாகும்.

    ஆசிய கிரிக்கெட்டில் இரண்டு முறை இறுதி ஆட்டத்தில் கோட்டைவிட்ட வங்காளதேசம் இந்த முறை கூடுதல் உத்வேகத்துடன் களத்தில் வரிந்து கட்டும். ஏற்கனவே சூப்பர்-4 சுற்றில் இந்தியாவிடம் அடைந்த படுதோல்விக்கும் பழிதீர்க்க தீவிரம் காட்டுவதால், இன்றைய மோதலில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    வங்காளதேசத்துடன் ஒப்பிடும் போது இந்தியாவின் கையே ஓங்கி நிற்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்திய வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். ஒருங்கிணைந்த முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்தியாவின் கையில் 7-வது முறையாக ஆசிய கோப்பை தவழ்வதை யாராலும் தடுக்க முடியாது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், டோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், பும்ரா.

    வங்காளதேசம்: லிட்டான் தாஸ், சவும்யா சர்கார், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம், முகமத் மிதுன், இம்ருல் கேயஸ், மக்முதுல்லா, மெஹிதி ஹசன், மோர்தசா (கேப்டன்), ருபெல் ஹூசைன், முஸ்தாபிஜூர் ரகுமான்.

    இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.  #AsiaCup2018 #INDvBAN
    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு மூன்றாவது முறையாக முன்னேறி அசத்தியுள்ளது வங்காளதேசம் அணி. #Asiacup2018 #Bangladesh #Final
    அபுதாபி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டி அபுதாபியில் நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுனின் பொறுப்பான ஆட்டத்தால் 48. 5 ஓவரில் 239 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, 240 ரன்க்ள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. வங்காளதேச வீரர்களின் பந்துவீச்சில் சிக்கி பாகிஸ்தான் வீரர்கள் விரைவில் வெளியேறினர். இமாம் உல் ஹக் மட்டும் அரை சதம் அடித்தார். இறுதியில், பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த தோல்வி மூலம் பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியது.



    பாகிஸ்தானை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்குள் மூன்றாவது முறையாக வங்காள தேசம் அணி நுழைந்துள்ளது.

    இதற்கு முன்னதாக, கடந்த 2012-ம் ஆண்டு மற்றும் 2014-ம் ஆண்டிலும் வங்காளதேசம் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    கடந்த 1996-ம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் வங்காளதேசம் அணி பாகிஸ்தானுடனான 32 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வங்காளதேசம் அணி வெற்றி பெற்றது.

    ஆனால், 2015ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற 4 போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது வங்காளதேசம் அணி என்பது குறிப்பிடத்தக்கது. #Asiacup2018 #Bangladesh #Final
    ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 பிரிவில் நேற்று நடைபெற்ற போட்டியில், 37 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. #AsiaCup2018 #BANvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டி அபுதாபியில் நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. லிட்டோன் தாஸ், சவுமியா சர்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    அந்த அணி 12 ரன்கள் எடுப்பதற்குள் முதல் 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் முகமது மிதுன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். முகமது மிதுன் 60 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் குவித்து அணியை மீட்டனர்.



    அரைசதம் அடித்த முஷ்பிகுர் ரஹிம் சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில்,
    வங்காளதேசம் 48.5 ஓவரில் 239 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    பாகிஸ்தான் அணியின் ஜூனைத் கான் 4 விக்கெட்டுகளும், ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. அந்த அணியின் பகர் சமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    வங்காளதேசம் அணியின் பந்து வீச்சில் அனல் பறந்தது. இதனால் பாகிஸ்தான் அணியினரின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன.

    அந்த அணியில் இமாம் உல் ஹக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 81 ரன்களில் அவுட்டானார். அடுத்து ஆசிப் அலி 31 ரன்னும், சோயப் மாலிக் 30 ரன்னும் எடுத்து வெளியேறினர். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இதனால் பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணி வெற்றி பெற்று, ஆசிய கோப்பையில் இருந்து பாகிஸ்தானை வெளியேறியது.   

    வங்காளதேசம் அணி சார்பில் முஸ்தபிசூர் ரகுமான் 4 விக்கெட்டுகளும், மெஹித் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் வங்காளதேசம் அணி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. #AsiaCup2018 #BANvPAK
    கேப்டன் பதவியில் அதிக ‘டை’ முடிவுகளை சந்தித்தவர்களில் மகேந்திர சிங் டோனியே முதல் இடம் பிடித்துள்ளார். #MSDhoni #AsiaCup2018
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. டி20 மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றிய ஒரே இந்திய அணி கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ள டோனி, இந்தியாவிற்காக அதிக போட்டிகளில் விளையாடிய 2-வது வீரரும், கேப்டனாக 200 போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரரும் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    நேற்று இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டி எம்எஸ் டோனி கேப்டனாக களம் இறங்கிய 200-வது போட்டியாகும். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. இதன்மூலம் டோனி தலைமையில் இந்தியா 5-வது முறையாக ‘டை’ முடிவை சந்தித்துள்ளது.



    இதன்மூலம் கேப்டனாக அதிக ‘டை’ போட்டிகளை சந்தித்த முதல் வீரர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார். ஆர் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் வாக், பொல்லாக் ஆகியோர் தலைமையில் அந்தந்த அணிகள் தலா மூன்று முறை ‘டை’ முடிவை சந்தித்துள்ளது.

    இந்த போட்டிக்கு முன்னர் எம்எஸ் டோனி தலைமையில் இந்தியா 199 போட்டிகளில் விளையாடி 110-ல் வெற்றியை ருசித்துள்ளது. 74 போட்டியில் தோல்வியும் சந்தித்துள்ளது. 4 போட்டிகள் ‘டை’யில் முடிந்துள்ளன. 11 போட்டிகள் எந்தவித முடிவையும் சந்திக்கவில்லை.
    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் அம்பயரின் மோசமான முடிவு குறித்து எம்எஸ் டோனி கருத்து தெரிவித்துள்ளார். #AsianCup2018 #INDvAFG #MSDhoni
    துபாய்:

    ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் மோதிய பரபரப்பான ஆட்டம் ‘டை’யில் முடிந்தது.

    முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 252 ரன் எடுத்தது. தொடக்க வீரர் முகமது ‌ஷசாத் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். ஜடேஜா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், கலீல் அகமது, தீபக் சாஹர், கேதர் ஜாதவ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். 253 ரன் இலக்குடன் இந்தியா விளையாடியது.

    தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். ராகுல் 60 ரன்னும், அம்பதி ராயுடு 57 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 3-வது வீரராக களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 44 ரன் எடுத்தார். விக்கெட்டுகள் சரிந்ததால் இந்தியா மோசமான நிலைக்கு சென்றது. 205 ரன்னில் 6 விக்கெட்டை இழந்தது. ஜடேஜா அணியை காப்பாற்ற போராடினார். 49-வது ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டை பறிகொடுத்தது.

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. ரஷீத்கான் வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தில் ரன் எடுக்காத ஜடேஜா 2-வது பந்தில் பவுண்டரி அடித்தார். 3-வது மற்றும் 4-வது பந்தில் தலா 1 ரன் கிடைத்தது.

    இதனால் ஸ்கோர் சமநிலை ஏற்பட்டது. வெற்றிக்கு 1 ரன் தேவை. 2 பந்து எஞ்சி இருந்தது. 5-வது பந்தில் ஜடேஜா ஆட்டம் இழந்தார். இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் ‘டை’யில் முடிந்தது.



    இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன் எடுத்து ‘ஆல்அவுட்’ ஆனது. ஜடேஜா 25 ரன் எடுத்தார். அப்தாப் ஆலம், ரஷீத்கான், முகமது நபி தலா 2 விக்கெட்டும், ஜாவித், அகமது தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    ஆப்கானிஸ்தானுடன் மோதிய ஆட்டம் ‘டை’யில் முடிந்தது குறித்து டோனி கூறியதாவது:-

    நாங்கள் தோல்வியின் நிலையில் இருந்ததால் ஆட்டம் ‘டை’ ஆனது மோசமில்லை. 5 முதல் 6 ஓவர்களில் எங்களது பேட்டிங் நுணுக்கம் சரியில்லாமல் போனது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சு மெய்சிலிர்க்க வைத்தது. ரன்அவுட்டும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    ஆடுகளத்தில் நடந்த சில சம்பவங்களை நான் பேச விரும்பவில்லை. ஏனென்றால் நான் அபராதத்தை சந்திக்க விருப்பமில்லை.

    இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

    இந்த ஆட்டத்தில் நடுவரின் தீர்ப்பு இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. டோனி, தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரிவியூ தீர்ந்துவிட்டதால் டி.ஆர்.எஸ். முறையை நாட முடியாமல் போனது. #AsianCup2018 #INDvAFG #MSDhoni
    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான கட்டத்தில் தனது சிறப்பான பந்துவீச்சால் இந்தியாவின் வெற்றியை பறித்து ஆட்டத்தை சமன் செய்தது ஆப்கானிஸ்தான். #AsiaCup2018 #INDvAFG #AFGvIND
    ஆசிய கோப்பையில் சூப்பர் 4 பிரிவில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ஷேசாத், ஜாவித் அஹ்மதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    முகமது ஷேசாத் அபாரமான ஆடி 116 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 124 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நைப் 15 ரன்களும், நஜிமுல்லா சத்ரன் 20 ரன்களும் அடித்தனர். முகமது நபி சிறப்பாக விளையாடி 56 பந்தில் 64 ரன்கள் விளாசினார். இறுதியில், ஆப்கானிஸ்தான் 50 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது.

    இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.



    இதையடுத்து, 253 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு இறங்கினர்.

    இருவரும் நிதானமாக ஆடி நூறு ரன்களை சேர்த்தனர். அணியின் எண்ணிக்கை 110 ஆக இருக்கும்போது முதல் விக்கெட்டாக அம்பதி ராயுடு 57 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து, லோகேஷ் ராகுல் 60 ரன்னில் வெளியேறினார்.

    அவரை தொடர்ந்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். அவர் ஒருபுறம் நிதானமாக ஆடினார். மறுபுறம் இறங்கிய கேப்டன் தோனி 8 ரன்னிலும், மனீஷ் பாண்டே 8 ரன்னிலும், கேதார் ஜாதவ் 19 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 44 ரன்னிலும் அவுட்டாகினர்.

    தொடர்ந்து ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இந்திய விக்கெட்டுகளை எடுத்தனர். ஆனாலும், அடுத்து இறங்கிய ரவீந்திர ஜடேஜா போராடி அணியை வெற்றி பெற பாடுபட்டார்.

    ஆனால், இறுதி ஓவரை வீசிய ரஷித் கான் ஜடேஜாவை அவுட்டாக்கி இந்தியாவின் வெற்றியை தடுத்து ஆட்டத்தை சமன் செய்தார். 

    இறுதியில், இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, போட்டி சமனானது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அபாரமான பீல்டிங், துல்லியமான பந்து வீச்சு என அசத்தினர்.

    ஆப்கானிஸ்தான் தரப்பில் மொகமது நபி. அப்தாப் ஆலம், ரஷித் கான் ஆகியோர் 2 விக்கெட்டும், ஜாவித் அஹமதி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்தியாவின் 3 வீரர்களை ரன் அவுட்டாக்கினர். #AsiaCup2018 #INDvAFG #AFGvIND
    ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப் பெரிய விக்கெட் வித்தியாச வெற்றியை பெற்றுள்ளது. #AsiaCup2018 #INDvPAK
    ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற மிகப் பெரிய விக்கெட் வித்தியாச வெற்றியாகும்.



    இதற்கு முன்பு 6 முறை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. தற்போது முதல் முறையாக 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. #AsiaCup2018 #INDvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் நடந்த மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற 250 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காளதேசம் அணி. #AsiaCup2018 #BANvAFG #AFGvBAN
    அபுதாபி:

    அபுதாபியில் நடைபெற்று வரும் கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் நடந்த மற்றொரு போட்டியில் இன்று வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக
    லித்தன் தாசும், நஜ்மல் உசைன் ஷண்டோவும் களமிறங்கினர்.

    லித்தன் தாஸ் 41 ரன்களுடனும், முஷ்பிகுர் ரகுமான் 33 ரன்களுடனும் அவுட்டாகினர். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 

    அடுத்து ஜோடி சேர்ந்த இம்ருல் கெய்சும் மகமதுல்லாவும் இணைந்து பொறுப்புடன் விளையாடினர். இதனால் வங்காளதேசம் அணி 200 ரன்களை கடந்தது.



    இறுதியில், வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களை எடுத்துள்ளது. மகமதுல்லா 74 ரன்களில் ஆட்டமிழந்தார். இம்ருல் கெய்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 72 ரன்களை எடுத்துள்ளார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் அல்தாப் ஆலம் 3 விக்கெட்டும், முஜிபுர் நயீப், குல்புதின் நயீப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 250 ரன்களை இலக்காக கொண்டு ஆப்கானிஸ்தான் விளையாடி வருகிறது. #AsiaCup2018 #BANvAFG #AFGvBAN
    ஆப்கானிஸ்தான் சுழல்பந்து வீச்சாளர்கள் உலகிலேயே தலைசிறந்து விளங்கி வருகின்றனர் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது பாராட்டு தெரிவித்துள்ளார். #Asiacup2018 #SarfrazAhmed #PAKvAFG
    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 பிரிவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்தது. ஹகமதுல்லா ஷகிதி சிறப்பாக ஆடி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான், இமாம் உல் ஹக், பாபர் அசம் மற்றும் சோயப் மாலிக்கின் பொறுப்பான ஆட்டத்தால் 7 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் சுழல்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். 

    இந்த வெற்றி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறுகையில், ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் நாங்கள் அதிர்ச்சி அடைந்து விட்டோம்.



    இமாம் உல் ஹக், பாபர் அசம்  மற்றும் சோயப் மாலிக்கின் திறமையான பேட்டிங்கால்தான் எங்களால் 258 ரன்களை எடுத்து வெற்றிபெற முடிந்தது.

    ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள சுழல் பந்துவீச்சாளர்கள் உலகிலேயே தலைசிறந்து விளங்கி வருகின்றனர். அவர்கள் பந்து வீச்சினால் எங்களை திணறடித்து விட்டனர் என தெரிவித்துள்ளார். #Asiacup2018 #SarfrazAhmed #PAKvAFG
    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற 258 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. #AsiaCup2018 #PAKvAFG #AFGvPAK
    அபுதாபி:

    அபுதாபியில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மொகமது ஷசாதும், இசானுல்லா ஜனாதும் களமிறங்கினர்.

    அந்த அணி 32 ரன்களுக்கு முதல் 2 விக்கெட்டுக்ளை இழந்தது. அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ரஹமத் ஷாவும்,  ஹஷ்மதுல்லா ஷகிதியும் பொறுப்புடன் விளையாடினர். இந்த ஜோடி 63 ரன்களை சேர்த்தது. ரஹமத் ஷா 36 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய அஸ்கர் ஆப்கான் ஷாகிதியுடன் இணைந்து 94 ரன்கள் ஜோடி சேர்த்தார். இதனால் அணியின் எண்ணிக்கை 200ஐ நெருங்கியது. இருவரும் அரை சதமடித்தனர். நிதானமாக ஆடிய அஸ்கர் ஆப்கான் 67 ரன்கள் எடுத்து  வெளியேறினார்.



    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 257 ரன்களை எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய    
    ஹஷ்மதுல்லா ஷகிதி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 97 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    பாகிஸ்தான் தரப்பில் மொகமது நவாஸ் 3 விக்கெட்டும்,  ஷகின் அப்ரிதி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. #AsiaCup2018 #PAKvAFG #AFGvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காளதேசம் அணி. #AsiaCup2018 #BANvIND #INDvBAN
    துபாய்:

    துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற இந்தியா அணி முதலில்  பந்து வீச்சை தேர்வு செய்தது.  வங்காளதேசத்தின் முன்னணி வீரர்களை இந்திய பவுலர்கள்
    துல்லியமாக பந்து வீசி அவுட்டாக்கினர்.

    இதனால் வங்காளதேசம் அணி 101 ரன்களை எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த மோர்டசாவும், மெஹிதி ஹசனும் பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடியால் வங்காளதேசம் அணி 170 ரன்களை கடந்தது.



    இறுதியில், வங்காளதேசம் அணி 49.1 ஓவரில் 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக மெஹிதி ஹசன் 42 ரன்களும், மோர்டசா 26 ரன்களும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார்3 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். #AsiaCup2018 #BANvIND #INDvBAN
    ×